உலகில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா மாற உள்ளது - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்று பிரதமர் மோடி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்சில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பாரீஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ.உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மனித குலத்தின் வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை காட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் முன்னேற்றங்கள் மிகவும் வித்தியாசமானவை என்று கூறினார். 

பின்னர், இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, உலகில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா மாற உள்ளதாகவும், அதே வேளையில் வலுவான உறவை உருவாக்க இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்றும் கூறினார்.

Night
Day