உலக புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு.கே.எம்.செரியன் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 82. கேரள மாநிலம் காயங்குளத்தில் 1942ம் ஆண்டில் பிறந்த செரியன், மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் பயின்றார். இந்தியாவின் முதல் கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சையை 1975ல் சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனையில் செய்தார். செரியனை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு 1991 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்தது. இந்நிலையில், பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே மருத்துவர் செரியனின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலையில் உள்ள கே.எம்.செரியன் ஹார்ட் பவுண்டேஷன் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மருத்துவமனை ஊழியர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், செரியனின் மகன் உள்ளிட்ட உறவினர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் வந்தவுடன் வரும் 1ஆம் தேதி உடலை நல்லடக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

varient
Night
Day