எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பெண் போலீசார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பெண்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இந்த விழாவுக்காக பாதுகாப்பு பணியில் முழுவதுமாக காவல்துறையே சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மட்டுமே ஈடுபடவுள்ளனர். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழா துவக்கம் முதல் நிறைவு வரை முழுவதும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக, குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். 2 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட காவலர்கள், 187 உதவி ஆய்வாளர்கள், 61 காவல் ஆய்வாளர்கள், 16 டிஎஸ்பிக்கள், 5 எஸ்பிக்கள், ஒரு ஐஜி, ஒரு கூடுதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரி என அனைவருமே பெண்கள் என்றும் அவர் கூறினார்.