உலக வர்த்தக அமைப்பில் சேர விண்ணப்பித்த நாடுகளுக்கு இந்தியா ஆதரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்த நாடுகளுக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது. கடந்த 26-ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமரோஸ் மற்றும் திமோர்-லெஸ்தே நாடுகள் முறைப்படி உலக வர்த்தக அமைப்பில் இணைந்தன. இது குறித்து பேசிய இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கமரோஸ் மற்றும் திமோர்-லெஸ்தே ஆகிய நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும், அவை உலக வர்த்தக அமைப்பில் சேர்க்கப்பட்டதற்காக மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து கோரி 22-க்கும் கூடுதலான நாடுகள் விண்ணப்பித்து இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய தெற்கு பகுதியின் தலைவர் என்ற வகையில், இந்தியா அதற்கு தன்னுடைய ஆதரவை அளிக்கும் என கூறினார்.

Night
Day