உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் 2-வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்றைய தினம் மதுரை, சிவகங்கை, தேனி ஆகிய இடங்களிலும், இன்றைய தினம் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் அமித் ஷா  பிரசாரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவருடைய   பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாகவும், இன்று இரவு அவர் மதுரை வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நாளை காலை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் தென்மாவட்டங்களில் வாக்குசேகரிக்கும் அவர், வாகன பேரணிகளிலும் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியானது. தற்போது அமித் ஷாவின் தமிழக வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day