இந்தியா
பஹல்காம் தாக்குதல் - பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கை...
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் பாகிஸ்தான் மீது இந்திய அ?...
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 8 பேரும் வெற்றி பெற்றதை அடுத்து பாஜகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு 10 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில் பாஜக சார்பில் 8 பேரும், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்கள் 8 பேருக்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் வந்தனர். இந்த வெற்றியை பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடினர். மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் ஏழு பேர்அணி மாறி வாக்களித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் பாகிஸ்தான் மீது இந்திய அ?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...