உ.பி.- சரக்கு ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசம் அருகே நிலக்கரி ஏற்றி சென்று தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 25 பெட்டிகளை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 
உத்தரப்பிரதேச மாநிலம், பிருந்தாவனில் இருந்து சூரத்கார் மின்சார ஆலைக்கு நிலக்கரிகளை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. மதுரா அருகே சென்ற போது நேற்று இரவு 8.45 மணி அளவில் சரக்கு ரயில் திடீரென விபத்தில் சிக்கியது. ரயில் எஞ்சினில் இணைக்கப்பட்டிருந்த 25 பெட்டிகள் தடம்புரண்டன. இது குறித்து தகவலறிந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். 

Night
Day