உ.பி.: திருமண நிகழ்ச்சிக்காக காரை ஹெலிகாப்டராக மாற்றிய நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஹெலிகாப்டர் வடிவில் மாற்றியமைக்கப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கஜூரியில் வசிக்கும் ஈஸ்வர் என்பவர் தனது காரை ஹெலிகாப்டர் வடிவில் மாற்றி அமைத்து தயாரித்து வந்துள்ளார். பின்னர் தனது வாகனத்திற்கு வர்ணம் பூசுவதற்காக எடுத்து சென்றபோது, போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, திருமண நிகழ்ச்சிக்காக இவ்வாறு மாற்றி அமைத்ததாக கூறியதால் அபராதம் விதித்த போலீசார், எச்சரித்து அனுப்பினர்.

varient
Night
Day