ஊழல் வாதிகளை தலைகீழாக தொங்கவிடுவோம் - அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்டில் ஊழல் மூலம் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகள் தலைகீழாக தொங்கவிடுவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலையொட்டி ஜாரியாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்தவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை எனவும் தெரிவித்தார். ஜார்க்கண்ட்டில் பாஜக அரசு அமைந்ததும், பணத்தை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து, ஒரு பைசா மீதம் வைக்காமல் மீட்கப்பட்டு கருவூலத்தில் வைக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

Night
Day