எஃப்.ஐ.ஆர் ராகுல் காந்திக்கு எதிரானது அல்ல, அம்பேத்கருக்கு எதிரானது" - காங்கிரஸ் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக புகாரின் பேரில் பதிவு செய்யப்ட்டுள்ள எப்ஐஆர், ராகுல் காந்திக்கு எதிரானது அல்ல, அம்பேத்கருக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது ராகுல் காந்தி தள்ளிவிட்டதால் 2 பாஜக எம்பிக்கள் காயமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


இது தொடர்பாக பாஜக அளித்த புகாரின் பேரில், நாடாளுமன்ற காவல் நிலையத்தில் ராகுல் காந்தி மற்றும் எதிர்க் கட்சி எம்பிக்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அம்பேத்கரை அவமதித்ததால் அமித் ஷா மன்னிப்பு கேட்க எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியதாக கூறினார். இதை திசை திருப்பவே பாஜக-வினர் திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 

Night
Day