எதிர்க்கட்சிகள் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொழிலதிபர் அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து, மக்களை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை கூடிய நாடாளுமன்றத்தில், தொழிலதிபர் அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பாக விவாதம் நடத்த எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு மக்களவை தலைவர் அனுமதி மறுத்தை கண்டித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவையில் குச்சல் குழப்பம் நிலவியது.

இதனால் அவையை கூச்சல் குழப்பம் நிலவியதால் இரண்டு முறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் தொடங்கிய மக்களவை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியில் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே அதானி மீதான லஞ்ச புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பதற்கு  எதிர்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து, எதிர்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அதானி மீதான லஞ்ச புகார் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

Night
Day