எதிர்க்கட்சி தலைவரை தடுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது - ராகுல் காந்தி கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் சம்பல் பகுதிக்‍கு இன்று காரில் புறப்பட்டனர். ​டெல்லி மீரட் விரைவுச்சாலையில் காரில் வந்த ராகுல்காந்தி, பிரியங்கா மற்றும் அவர்களுடன் வந்த காங்கிரஸ் தலைவர்களை காஸிப்பூர் மாவட்ட எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

ஒன்றரை மணி நேரத்துக்‍கு மேலாக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அங்கு காத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாரிக்கப்பட்டது.

பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி உரையாற்றிய ராகுல்காந்தி, வன்முறையால் பாதித்த சம்பல் பகுதிக்கு செல்ல தனக்‍கு முழு உரிமை உள்ளது என்று தெரிவித்தார். 

தொடர்ந்து, மக்‍களவை எதிர்க்‍கட்சி தலைவரான ராகுல்காந்தி​ சம்பல் பகுதிக்‍கு சென்று பாதிக்‍கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற அரசியல் சாசனப்படி உரிமை உள்ளதாகவும், அவரை அனுமதிக்‍க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார். 

எனினும் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் வேறு வழியின்றி ராகுல்காந்தி, பிரியங்கா இருவரும் ​தங்கள் வந்த காரிலேயே டெல்லி திரும்பிச்சென்றனர்.

Night
Day