எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்திய அரசும், சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசும் எடுத்தது. இதனால் இரு நாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று காலை எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பந்திபோராவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் இரு தரப்பிலும் உயிர் சேதம் இல்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

Night
Day