எல்.ஐ.சி. நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய காலாண்டு வருவாய் ரூ.10,461 கோடியாக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்‍கு பிந்தைய லாபமாக 10 ஆயிரத்து 461 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.

கடந்த காலாண்டு 9 ஆயிரத்து 544 கோடியாக இருந்த வரிக்‍கு பிந்தைய லாபம் தற்போதைய காலாண்டில் 9.61 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் ஆண்டு பிரீமியம் வருமான அடிப்படையில் ஒட்டுமொத்த சந்தை பங்களிப்பு 61.42 சதவீதத்தில் இருந்து 64.02 சதவீதமாக உயர்ந்துள்ளது. காலாண்டு மொத்த பிரீமிய வருமானம் 98 ஆயிரத்து 363 கோடி ரூபாயில் இருந்து 15.66 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 770 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எல்ஐசி சொத்து மதிப்பு 46 லட்சத்து 11 ஆயிரம் கோடியில் இருந்து 16.22 சதவீதம் அதிகரித்து 53 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. எல்ஐசி நிறுவனம் செலவுகளை குறைத்து லாப வரம்பை பெருக்‍குவதில் உறுதியாக இருப்பதாக அந்நிறுவன சி.இ.ஓ. மற்றும் மேலாண்மை இயக்‍குநர் சித்தார்த் மொஹந்தி தெரிவித்துள்ளார். 

Night
Day