எழுத்தின் அளவு: அ+ அ- அ
எஸ் எம் கிருஷ்ணாவின் மறைவுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த எஸ்.எம்.கிருஷ்ணா அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்டவர் என்றும், கர்நாடக முதலமைச்சராக, குறிப்பாக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவு கூறப்படுகிறார் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். எஸ் எம் கிருஷ்ணாவின் தலைமைத்துவம் மற்றும் பொதுசேவை மாநிலத்திலும், நாட்டிலும் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். எஸ் எம் கிருஷ்ணாவின் பங்களிப்புகள் கர்நாடகாவின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, பெங்களூருவை உலக வரைபடத்தில் இடம்பிடிக்க வைத்தாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். கர்நாடக முதலைமைச்சர் சித்தராமையா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் எஸ் எம் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.