ஏஐ தொழில்நுட்பம் நமது பொருளாதாரம், பாதுகாப்பு, நமது சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செயற்கை நுண்ணறிவை நிர்வகிப்பதற்கு உலகளாவிய கூட்டு முயற்சிகள் தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

3 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிகாரிகள்  உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில் பாரீஸில் உள்ள கிராண்ட் பலாய்ஸ் மியூசியத்தில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, ஏ.ஐ உச்சிமாநாட்டை நடத்தியதற்கும், அதற்கு இணைத் தலைமை தாங்க தன்னை அழைத்ததற்கும் தனது நண்பரான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார். ஏஐ தொழில்நுட்பம், நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தை மறுவடிவமைத்து வருவதாகவும், மனிதகுலத்திற்கான குறியீட்டை எழுதி வருவதாகவும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவை நிர்வகிப்பதற்கு உலகளாவிய கூட்டு முயற்சிகள் தேவை எனக்கூறிய பிரதமர் மோடி, இதற்காக நாம் ஆழமாக சிந்தித்து விவாதிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு வலியுறுத்தினார்.

சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பல துறைகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற செயற்கை தொழில்நுட்பம் உதவும் என கூறிய மோடி, இலக்குகளை எளிதாகவும், வேகமாகவும் அடைவதற்கு இது உதவும் எனவும் கூறினார். 

Night
Day