ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ.80 இலட்சம் அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணியாளர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதற்காக 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு 80 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா' நிறுவன விமான ஊழியர்களுக்கான பணி நேர வரம்புகள், ஓய்வு நேரம், விமானக் குழுவினரின் பணிச்சுமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக, விமானப் போக்குவரத்து கண்காணிப்பு இயக்குனரகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் விமான போக்குவரத்து இயக்குநரகம் நடத்திய நேரடி தணிக்கையில் 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இது தொடர்பாக 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு கடந்த ஒன்றாம் தேதி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Night
Day