ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ரூ. 300 தரிசன டிக்கெட் முன்பதிவு தேதி மாற்றம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய 300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 10ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். எனவே சொர்க்கவாசல் வழியாக செல்ல விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 23ஆம் தேதி காலை 11 மணி முதல் தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் 500 ரூபாய் கட்டண ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்‍கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதேபோல் இம் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கி சொர்க்கவாசல் திறந்துள்ள நாட்களில் 300 ரூபாய் கட்டணத்தில் ஏழுமலையானை வழிபட விரும்பும் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day