ஐ.நா. : பாக்.கொண்டுவந்த வரைவு தீர்மானம் : புறக்கணித்த இந்தியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணா்வுக்கு எதிராக ஐ.நா.வில் பாகிஸ்தான் கொண்டு வந்த வரைவு தீா்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்தத் தீா்மானம் குறித்து பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியர்கள், யூதா்கள் மீதான வெறுப்புணா்வால் தூண்டப்பட்டு, அவா்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்களையும் இந்தியா கண்டிப்பதாக கூறினார். ஆனால் கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதம் ஆகியவை அடங்கிய ஆபிரகாமிய மதங்களைத் தாண்டி, பிற மதங்கள் மீதும் வெறுப்புணா்வு நிலவுகிறது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம் என சுட்டிக்காட்டினார். தற்போதைய தீா்மானத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், பிற்காலத்தில் குறிப்பிட்ட மதங்களுக்கு எதிரான வெறுப்புணா்வை மையமாகக் கொண்ட எண்ணற்ற தீா்மானங்களை ஐ.நா.வில் கொண்டுவருவதற்கு வழிவகுக்கக் கூடாது எனவும் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ் தெரிவித்தார். 

Night
Day