ஒடிசா - மேற்குவங்கம் இடையே கரையை கடந்தது டானா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டானா புயல், மேற்குவங்கம் பிதர்ணிகா - ஒடிசாவின் தாமரா இடையே முழுவதுமாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலையில் தீவிரப் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. நள்ளிரவு 12.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் பகுதிக்கு வடகிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும், தாமரா பகுதிக்கு தென்கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடற்கரை அருகே உள்ள பிதர்கனிகா மற்றும் தாமரா இடையே இன்று தீவிரப் புயலாக மாறி, முழுவதுமாக கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Night
Day