ஒடிசா : அரசு பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்‍கு 10 நாள் கூடுதல் விடுமுறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசாவில் அரசு பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்‍கு 10 நாள் கூடுதல் விடுமுறை அறிவித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெறுகிறது. ஒடிசா அரசு அண்மையில் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில் அரசு பெண் ஊழியர்களுக்கு கூடுதலாக 10 நாட்கள் சாதாரண விடுப்பு அறிவித்து முதல்வர் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தற்போது அரசு பெண் பணியாளர்கள் 15 நாள் சாதாரண விடுப்பு பெறுவதாகவும், இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர்கள் ஆண்டுக்கு கூடுதலாக 10 விடுப்புடன், ஆண்டுக்கு 25 விடுப்பு பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை அரசு பெண் ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.

Night
Day