ஒடிசா: ட்ரெட்மில்லில் 12 மணி நேரம் ஓடி கின்னஸ் சாதனை படைத்த 34 வயது இளைஞர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசாவை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், ட்ரெட்மில்லில் 12 மணி நேரம் ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒடிசாவின் ரூர்கேலாவை சேர்ந்த சுசித் குமார் என்பவர், கடந்த மார்ச் 12 ஆம் தேதி காலை 8.15 மணிக்கு தொடங்கி, இரவு 8.20 மணி வரை, தொடர்ச்சியாக 68.04 கிலோமீட்டர் என்ற அளவுக்கு ஓடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். மேலும் இவர் இதுவரை 33 மாரத்தான்களில் ஓடி ஆயிரத்து 392 கிலோ மீட்டர் தொலைவை கடந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day