ஒய்எஸ்ஆர் காங். எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என சவால்விட்ட ஓட்டுனர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீதர் ரெட்டிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என சவால்விட்ட ஓட்டுநர் ஒருவர் பாதி மொட்டையடித்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. புட்டபர்த்தியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீதர் ரெட்டியிடம், மகேஷ்வர் ரெட்டி என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால் வேலையை விட்ட மகேஷ்வர் ரெட்டி, ஸ்ரீதர்ரெட்டிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது, கிடைத்தால் தான் பாதி மொட்டையடித்து பாதி மீசையை எடுத்து கொள்வதாக சவால் விடுத்தார். இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீதர் ரெட்டியின் பெயர் இடம் பெற்றது. இதனால் புட்டபர்த்தியில் உள்ள கோயிலில் பாதி மொட்டையடித்த மகேஷ்வர் ரெட்டி, யாரும் ஸ்ரீதர் ரெட்டிக்கு வாக்களிக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Night
Day