ஒருவரையொருவர் அழித்துக் கொள்ள இந்தியா கூட்டணி எதற்கு - உத்தவ் சிவசேனா கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்கப் போராடியது, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டதாக சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு விமர்சித்துள்ளது. 

இதுதொடர்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ள வேண்டும் என்றால் இந்தியா என்ற கூட்டணி எதற்கு எனக் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி தேர்தல் முடிவுகளிலிருந்து எதிர்க்கட்சிகள் இனியும் கற்றுக் கொள்ளத் தவறினால், அது மோடி மற்றும் அமித் ஷாவின் எதேச்சதிகார ஆட்சியை வலுப்படுத்தும் என காட்டமாக தெரிவித்துள்ளது. 

Night
Day