ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடக்கம் முதலே ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்து வரும் பா.ஜ.க., மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் இதனை வாக்குறுதியாக அறிவித்தது. இத்திட்டம் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டு, அக்குழுவும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவாக அறிக்கை அளித்தது. இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 18 திருத்தங்கள் செய்யவும் பரிந்துரை செய்தது. இதையடுத்து நடப்பு ஆட்சி காலத்திலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தநிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர் மட்டக் குழுவின் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day