ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஓட்டுநர் - துரிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நடத்துநர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், நடத்துநர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

கர்நாடக மாநிலம் நெலமங்கலவில் இருந்து தசனபுரா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் கிரண்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை கவனித்த நடத்துநர், துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றினார். துணிச்சலாக செயல்பட்ட நடத்துநர் ஓபலேஷுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். 

varient
Night
Day