ஓரிரு நாட்களில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024 மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இந்த வாரம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதோடு ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளின் குழு பல்வேறு மாநிலங்களில் இறுதிகட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

Night
Day