ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவாவில் ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கோவா சென்றுள்ள பிரதமர் மோடி, ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தை திறந்து வைத்தபின், 2024 இந்திய எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்தார். இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 17 எரிசக்தித்துறை அமைச்சர்கள், 35 ஆயிரம் பங்கேற்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, பிற்பகலில் வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா-2047 என்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும், சுமார் ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்து பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

Night
Day