கங்கனா ரனாவத் 70 ஆயிரத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி  பெற்றுள்ளது. கங்கரா, மண்டி,  ஹமிர்பூர், சிம்லா ஆகிய நான்கு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர்.  மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் 70 ஆயிரத்திற்கு மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல், ஹமிர்பூர் தொகுதியில் அனுராக் சிங் தாக்கூர், கங்கரா தொகுதியில் ராஜீவ் பரத்வாஜ், சிம்லா தொகுதியில் சுரேஷ் குமார் காஷ்யப் ஆகியோரும் வெற்றி பெற்றனர். நான்கு தொகுதிகளிலும் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.

Night
Day