கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புகழ்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் பக்தர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டனர்.  

2 நாட்கள் நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 5 மணி அளவில் ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை ஆகியோர் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடியை ஏற்றுகின்றனர். தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி சிலுவை பாதை திருப்பலி நடைபெறவுள்ளது. இரவு 8 மணி அளவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை இலங்கை கடற்படை மற்றும் இரு நாட்டு பக்தர்களும் சேர்ந்து தோளில் சுமந்து, ஆலயத்தை சுற்றிவரும் தேர் பவனி நடைபெறவுள்ளது. 


கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேசுவரத்தில் இருந்து 78 விசைப்படகுகள், 23 நாட்டுப்படகுகள் மூலம் 3 ஆயிரத்து 464 பக்தர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டுள்ளனர். திருவிழாவை முன்னிட்டு 5 நாட்கள் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 

Night
Day