எழுத்தின் அளவு: அ+ அ- அ
இலங்கைக்கு கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது திமுகவும், காங்கிரசும்தான் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பொதுமக்களுக்கு உண்மை நிலை தெரியவேண்டும் என்பதற்காகவே பல ஆண்டுகளாக முந்தைய அரசு மறைத்து வைத்த உண்மைகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பிரச்னை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதாக தெரிவித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழக முதல்வருக்கு தாம் 21 முறை பதில் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசும், திமுகவும் இரட்டை வேடம் போடுவாகவும் குற்றம் சாட்டினார்.
1974ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையேயான ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ஏற்கனவே தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
அப்போதைய தமிழ்நாடு அரசுக்கு தெரிந்தே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர்,
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 180 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டதாக கூறினார். ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால்தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.