கடந்த 2 ஆண்டுகளில் 1.53 லட்சம் வீடுகள் அரசால் இடிப்பு - 7.4 லட்சம் பேர் வெளியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில்  ஒரு லட்சத்து 53 ஆயிரம் வீடுகள் அரசால் இடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஹவுசிங் அண்ட் லேண்ட் ரைட்ஸ் நெட்வொர்க் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 23 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள 7 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் சுமார் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Night
Day