கடந்த 20 ஆண்டுகளில் 6,658 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 658 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். அப்போது பாஜக ஆட்சியில் 3 ஆயிரத்து 137 இந்திய மீனவர்களும், 2004 - 2013-ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 915 பேரும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு இணையமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 2003-ம் ஆண்டு 606 பேர் சிறைப் பிடிக்கப்பட்டதாகவும், 2005-ல் ஒரு தாக்குதல்கூட நடைபெறவில்லை என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Night
Day