கடந்த 2023ம் ஆண்டு மின்சார வாகன விற்பனை 49.25% அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மின்சார வாகன விற்பனை கடந்த 2023ம் ஆண்டு மட்டும்  49 புள்ளி 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிருஷன் பால் குர்ஜார், இரு சக்கர வாகனம், 3 சக்கர வாகனம், வணிக பயன்பாட்டு வாகனம் மற்றும் மக்கள் பயன்பாட்டு வாகனம் என நான்கு பிரிவுகளின் கீழ் 2022ம் ஆண்டில் 10 லட்சத்து 25 ஆயிரத்து 63 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்தார். 2023ம் ஆண்டில் இதே பிரிவின் கீழ் 15 லட்சத்து 29 ஆயிரத்து 947 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த நிதி ஆண்டில் மட்டும் 15 லட்சத்து 31ஆயிரத்து 444 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Night
Day