கடந்த 5 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறு குறு நடுத்தர தொழில்கள் மூலம் இந்தியாவில் கடந்த 5 வருடங்களில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்றத்தின் மக்களவையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் கடந்த 2019ம் ஆண்டு முதல் கிடைத்துள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், அதுகுறித்த மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்ட்டது. அதற்கு பதிலளித்துள்ள மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சி, மத்திய அரசின் உதயம் பதிவு இணையதளம் மூலம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 20 கோடியே 51 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Night
Day