கமல்நாத், பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படும் தகவல் உண்மையில்லை : திக் விஜய் சிங் திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், பாஜகவில் இணைவதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை என மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை எம்பி சீட் வழங்காததால் கமல்நாத் தனது மகன் நகுல் மற்றும் சில காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக-வில் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பாக பேசிய ஜிது பட்வாரி, மறைந்த காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி, கமல்நாத்தை தனது 3-வது மகன் என்று தெரிவித்ததை குறிப்பிட்டு, அவர் பாஜகவில் இணைவதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Night
Day