கர்நாடகாவில் அதிகரிக்கும் குரங்கு காய்ச்சல் : 53 பேர் பாதிப்பு - 2 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை 53 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிவமொக்கா மாவட்டம் ஹோசாநகரில் 18 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், சிக்கமங்களூருவில் 79 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக உத்தர கன்னடா மாவட்டத்தில் 34 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day