கர்நாடகாவில் ஆப்ரேசன் தியேட்டரில் போட்டோ ஷூட் - மருத்துவர் டிஸ்மிஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா அருகே அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் போட்டோ ஷுட் நடத்திய மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் அரசு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராக வேலை செய்தவர் அபிஷேக். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய 'போட்டோ ஷுட்' எடுக்க ஆசைப்பட்டார். இதனையடுத்து தனது வருங்கால மனைவியை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அபிஷேக்கிற்கு, வருங்கால மனைவி மருத்துவ உபகரணங்கள் எடுத்துக் கொடுத்து உதவுவது போலவும், 'போட்டோ ஷுட்' எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மருத்துவர் அபிஷேக்கை சஸ்பெண்ட் செய்து, சித்ரதுர்கா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Night
Day