கர்நாடகாவில் தேசிய கொடிக்கு பதிலாக ஏற்றப்பட்ட அனுமன் கொடி அகற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் மாண்டியாவின் கெரகோடு பகுதியில் ஏற்றப்பட்ட அனுமன் கொடி அகற்றப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவுகிறது. மாண்டியாவில் உள்ள கெரகோடு பகுதியில் கடந்த வாரம் 108 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டு தேசிய கொடி ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தேசிய கொடிக்கு பதிலாக அனுமன் கொடி ஏற்றப்பட்டதையடுத்து, கொடியை அகற்ற அதிகாரிகள் சென்றனர். இதனை கண்டித்து, பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ ரவி குமாரின் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Night
Day