கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு - மனைவி, ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்களின் ரூ.300 கோடி மதிப்புள்ள 142 சொத்துக்‍கள் முடக்‍கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மீதான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மனைவி மற்றும் சிலரின் 142 அசையாச் சொத்துக்‍களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

கர்நாடகாவில், முதலமைச்சர் சித்தராமையாவின் சொந்த ஊர் மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். இங்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, சித்தராமையா மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில், நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் உள்ள 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 142 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Night
Day