கர்நாடகா : மருத்துவமனை வார்டில் ரீல்ஸ் - 38 மாணவர்களின் மருத்துவ பயிற்சி காலம் நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் மருத்துவமனை வளாகத்திற்குள் இன்ஸ்டா ரீல்ஸ் பதிவு செய்த 38 மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி பணிக்காலத்தை நீட்டித்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கடக் மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவ மாணவர்கள் 38 பேர், மருத்துவமனை நடைபாதையில் இந்தி மற்றும் கன்னட பாடல்களுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட மருத்துவ மாணவர்கள் மீது விதிகளை மீறியதாகக் கூறி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரீல்ஸ் பதிவிட்ட மாணவர்களின் பயிற்சி பணிக்காலத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

Night
Day