கர்நாடகா : 12 ஆண்டுகளாக மனைவியை தனி அறையில் பூட்டி வைத்த கொடூரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா மாநிலம் மைசூரில் மனைவியை 12 ஆண்டுகளாக கணவன் தனி அறையில் பூட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மைசூர் மாவட்டம் ஹரிக்கே பகுதியை சேர்ந்த சுனாலயா என்பவர், 12 ஆண்டுகளுக்கு முன் ஷீலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஷீலா 3வது மனைவி என கூறப்படுகிறது. ஏற்கனவே மணம் முடித்த 2 பெண்களும் சுனாலயாவின் சித்ரவை தாங்காமல் பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஷீலாவும் பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காக தனி அறையில் பூட்டி வைத்துள்ளார். பிள்ளைகள் பள்ளி முடித்து வரும் போது, தந்தை வரும் வரை வீட்டின் வெளியே காத்திருப்பதாகவும், ஜன்னல் வழியே குழந்தைகளுக்கு உணவு கொடுத்து வந்ததாகவும் ஷீலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் பூட்டை உடைத்து ஷீலாவை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் கணவர் சுனாலயாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Night
Day