எழுத்தின் அளவு: அ+ அ- அ
கர்நாடகா அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் வினாடிக்கு 35,692 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 33 ஆயிரத்து 367 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 31,852 கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 10 ஆயிரத்து 692 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், கபிணி அணைக்கு நீர் வரத்து நேற்று இரவு 17,877 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 18,147 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாகவே நீடிக்கிறது. அதன்படி, இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 35,608 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 35,692 கன அடியாக அதிகரித்துள்ளது.