கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் அதிகரிப்பு - குமாரசாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ளது குறித்து மக்களுக்‍கு விழிப்புணர்வு ஏற்பட்ட பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பாதயாத்திரை நடத்தி வருவதாக மத்திய அமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான ​குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலற்ற, வெளிப்படை தன்மை கொண்ட அரசாக காங்கிரஸ் அரசு செயல்படும் என கூறியதாகவும், ஆனால் பதவிக்‍கு வந்து ஓராண்டாகியும் வெளிப்படை தன்மை இல்லாத அரசாக சித்தராமையா அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். லஞ்சம் ஊழலில் திளைக்‍கும் அரசு தனது நிலையை மாற்றிக்‍கொள்ளாமல் இருப்பதை மக்‍களுக்‍கு விளக்‍கவே பாதயாத்திரை நடத்தப்படுவதாகவும், முரண்பாடுகளை கொண்ட காங்கிரஸ் அரசு தொடர்ந்து பதவி வகிக்‍கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.

Night
Day