கவரப்பேட்டை ரயில் விபத்து - கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கவரப்பேட்டை ரயில் விபத்து, ஒடிசா பாலாசோர் ரயில் விபத்தை பிரதிபலிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2023ம் ஆண்டு ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மெயின் லைனில் சிக்னல் கொடுத்தும், லூப் லைனில் சென்றாதால், அங்கு நின்றிருந்த ரயில் மீது மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்து பாலாசோர் ரயில் விபத்தை போன்று உள்ளதாகவும், ரயில் விபத்துக்களில் பல உயிர்கள் பலியாகியபோதும் மத்திய அரசு பாடம் கற்கவில்லை என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மத்திய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும் என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Night
Day