காங்கிரசில் ஐக்கியம் ஆகும் உடுப்பி பாஜக எம்.பி. ஜெயப்பிரகாஷ் ஹெக்டே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநில பா.ஜ.க. எம்.பி.யான ஜெயப்பிரகாஷ் ஹெக்டே அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் உடுப்பி மக்களவை தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வரும் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று மாலை கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் முதலமைச்சர் சித்தராமையா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே இணைவார் என தெரியவந்துள்ளது. உடுப்பி - சிக்மகளூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ஜெயப்பிரகாஷ் ஹெக்டேவுக்கு வாய்ப்பளிக்கப்படும் என கூறப்படுகிறது.

varient
Night
Day