காங்கிரஸுக்கு மேலும் ரூ.1,745 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை - காங். கடும் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


கடந்த 2014 முதல் 2017 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு ஆயிரத்து 745 கோடி ரூபாய் அபராதம் செலுத்துமாறு காங்கிரஸுக்கு வருமான வரித் துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, 2018-19-ம்  ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதில் 45 நாட்கள் காலதாமதம் எனக் கூறி காங்கிரஸின் வங்கிக் கணக்குள் முடக்கப்பட்டன. அதிலிருந்து 135 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. மேலும் ஆயிரத்து 823 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் வங்கிக் கணக்கு முடக்கம் மற்றும் அபராதத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது புதிதாக ஆயிரத்து 745 கோடி ரூபாய் அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானவரித்துறை காங்கிரஸுக்கு மொத்தமாக 3 ஆயிரத்து 567 கோடி ரூபாய்  அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Night
Day