காங்கிரஸ் கட்சியின் கொள்கை குறித்து ராகுலுக்கே தெரியாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணியிடம் எந்த கொள்கையும் இல்லை என லால் பகதூர் சாஸ்திரியின் பேரன், விபாகர் சாஸ்திரி குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரனான அவர், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அந்த மாநில துணை முதலமைச்சர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர், தனக்கு பாஜகவின் கதவை திறந்துவிட்டதற்காக நன்றி தெரிவித்தார். தாத்தா லால் பகதூர் சாஸ்திரியின் எண்ணங்களை முன்னெடுத்து செல்ல உள்ளதாக கூறிய விபாகர் சாஸ்திரி, காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்னவென்று ராகுல்காந்திக்கே தெரியாது என்றும் சாடினார். 

Night
Day