காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சிஆர்பிஎஃப் சார்பில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது பிரதமருக்கான SPG பாதுகாப்புக்குப் பிறகு, அவர்களின் உயிருக்கு அதிக அளவில் அச்சுறுத்தல் உள்ள ஒரு நபருக்கு அரசாங்கம் வழங்குவதாகும். இந்த பாதுகாப்புப் பணியில் 55 பணியாளர்களும், சிஆர்பிஎஃப் கமாண்டோக்களும் 24 மணி நேரமும் ஈடுபடுவர். மேலும்  குண்டு துளைக்காத வாகனம் மற்றும் மூன்று ஷிப்டுகளில் எஸ்கார்ட் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day