எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லி சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு இடங்களில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியாத நிலை நீடிக்கிறது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அரியணையில் ஏற உள்ளதால் அக்கட்சியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 47 இடங்களிலும், ஆம் ஆத்மி 23 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட முன்னிலையில் இல்லாததால் அக்கட்சியினர் விரக்தியில் உள்ளனர். 2013-ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் 3 தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது 2015, 2020 சட்டமன்ற தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாத நிலையில், நடந்து முடிந்த 2025 தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.